"சிறைவாசியே சொல்.... உடைக்க முடியாத இந்த உறுதியான சங்கிலியை வடித்தவர் யார்?"
சிறைவாசி சொன்னான் "கவனத்தோடு இதை வடித்தவன் நான்தான். வெல்ல முடியா என் வலிமை இவ்வுலகையே சிறைப்பிடித்து தடையில்லா சுதந்திரத்தில் நான் திளைக்க உதவும் என நினைத்தேன். இரவும் பகலும் பெரும் தீ வளர்த்து இரும்பை உருக்கினேன். பேரடிகள் அடித்தவண்ணம் இருந்தது சம்மட்டி. வடிப்பது முடிந்தது. இணைப்பும் கொடுத்தாயிற்று. உடைக்கமுடியாத உறுதி தெரிந்தது சங்கிலியில். முடிவில் பார்த்தால் அதன் பிணைப்பில் நான்"
(ரவீந்திரநாத் தாகூர், கீதாஞ்சலி, 31-ம் பா)
அடிமைத் தளை, அடிமையை மட்டுமல்ல அடிமை கொண்டவனையும் துன்புறுத்தும். பெண்கள் தினத்தில் என் ஆண் நண்பர்களுக்கு இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன். —
No comments:
Post a Comment